Tuesday, 20 November 2012

என் இதயம்..



வெட்டவெளியில் திறந்தே வைத்தேன்
அலங்கரிக்கப்பட்ட என் இதயத்தை
விற்பனைக்கில்லை என்ற போதும்
யார் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளட்டும்
என விளம்பரப்படுத்தியே
அங்கு விட்டு வைத்தேன்...

பட்டாம்பூச்சிகள் பார்த்து ரசிக்க விட்டுவைத்தேன்
தென்றல் வருடி விளையாடட்டுமென காத்திருந்தேன்
வல்லூறுகள் வந்து கலைத்து போடுமென
தெரியாமல் உறங்கிவிட்டேன்
வலிகள் எப்போதும் வலிப்பதில்லை
உன்னையும் அதில்தானே பத்திரமாய் வைத்திருந்தேன்
எட்டிப் பார்க்காதே
நான் நலமாய்தான் இருக்கிறேன்
நீ அங்கு நலமாய் இருக்கும்வரை...