லேசாக
எட்டிப் பார்க்கும் சூரியனின் ஒளிக்கீற்றுகள்
எங்கோ
கேட்கும் பேப்பர்காரனின் சைக்கிள் சத்தம்
தெருவில் பால்காரரின்
மணியோசை
அரிதாகிப்
போய்கொண்டிருக்கும் காகங்களின் கரைச்சல்
அப்பாவின் காலை
நேர பூஜை
அம்மாவின்
சமையல் சப்தமும் வாசமும்
பக்கத்து
வீட்டின் மழலையின் பாலுக்கு அழும் குரல்
நாளின்
வருகையை அறிவிக்கின்றன
எனக்கு
மட்டும் தாலாட்டாகின்றன
பொருளாதாரத்தின்
அவசியங்களுக்காக
இந்தியாவின்
இரவு நேரக்கூலிகளில்
நானும்
ஒருவன்...
No comments:
Post a Comment