தொட்டுத் தொடரும்
தீராத கனவுகள்
நமக்கான செய்திகளா
நம்மை குழப்பி
உள்ளே இழுத்து
மறக்கடிக்கச் செய்து
குழம்பிய நம்மை
வெளியே துப்பி
மிரட்டும் கனவுகளே...
அந்த 5அடி பெண்ணின்
முழங்கால் தொடும் 4அடி கூந்தல்
அதன் நுனியில்
ஈரம் சொட்டுவதை
ரசித்துகொண்டே
பயணித்தேன்...
மெல்லத் தலைசாய்த்து
கண் மூட
பரந்த காடு
கண் முன்னே விரிந்தது
பசுமையான மரங்கள்
ஈரத்தை பூசிக் கொண்டு
அழகாக...
அதோ அந்த வண்ண
புள்ளி மான்
அங்குமிங்குமாக துள்ளிக் குதித்து
பசியாறி விளையாடியிருக்க
பாய்ந்து வந்தது
ஒரு அம்பு...
வந்த திசையில்
வாட்டசாட்டமாய் அவன்
வேடன்
கம்பீரமாய் குதிரையில்
வில்லேந்தி கூர்மையாய்...
அம்புக்கு தப்பி
புள்ளி மான்
துள்ளிக் குதித்தோடியது
உயிர் பயத்தோடு...
கண்ணில் சிக்கியபின்
விடுவேனா என்றவனும்
வேகமாக விடாமல்
துரத்திக் கொண்டு
அம்பெய்கிறான்...
வேகமாகவும் லாவகமாக
வளைந்து நெளிந்து
அத்தனையும் தவிர்த்து
அதன் ஓலம் அசரீரியாய்...
அடேய்
என் வயிற்றில் இருக்கும் சிசு
இந்த கானகம் பார்க்க வேண்டும்
அந்த குரல்
அத்தனை சத்தமாய்
பாவமாய்
நான் கண் விழித்தேன் துணுக்குற்று
மனம் முழுதும் பாரமாய்...
காலை என்னவள்
என்னை எழுப்பிய போது இருந்த
மறைந்த கனவு தந்த
அதே பாரம்...
அந்த காலை கனவில்
அத்தனை பேர் துரத்த
நான் தூக்கிக் கொண்டு ஓடிய
அந்த சிறுவனின்
சோகம்
இந்த புள்ளி மானும் கொண்ட்தோ...
காப்பாற்ற நான் ஓடுகிறேன்
வேக்மாக ஓடுகிறேன்
வாகனங்களை தாண்டி
வேகமாக ஓடுகிறேன்
ஓடிக்கொண்டிருக்கையில்
யாரோ என் தோள் தொட
திடுக்கிட்டு திரும்பினால்
தூக்கம் கலைத்து
என் மனைவி
என் முன்னால்
போகலையா என்ற கேள்வியுடன்...
தீராத அந்த தூக்கமும்
தொடரும் அந்த பாரமும்
சேர்ந்து கொண்ட பாரமும்
4 அடி கூந்தலை பர்த்து கொண்டே
மீண்டும் கண் மூடிகிறேன்
அந்த புள்ளி மான்
என்ன ஆனதோ???
நான் ஓடுகிறேன்...
2 comments:
இது எந்த வகை என்று எனக்கும் தெரியவில்லை... சில சமயம் சில கருத்துக்கள்/எண்ணங்கள் அதுவாக வந்து எழுதச் சொல்லும். அப்படி வந்ததுதான் இந்த பதிவு... விமர்சனங்களும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன...
வித்தியாசமான வரிகள்...
அருமை...
சிறப்பான பதிவுகளை வரவேற்கிறோம்..
Post a Comment