Sunday, 27 November 2011

விட்டில் பூச்சியாய்


நான் யார்
என்னை நானே
கேட்டுக் கொள்ளும் கேள்வி
என்னை நானே
மறந்து போய்விட்ட காலங்கள்
வெகு தூரத்தில்
நான் மட்டும் தனியாக
இது மயக்கமா
இல்லை தெளிவா...

வந்த இடம் தெரியாமல்
போகும் இடம் புரியாமல்
கேள்விகளுக்கு உள்ளே
பதில்களை தேடுகிறேன்...

என் புத்தகங்களின் பக்கங்களை
புரட்டிப் பார்க்கின்றேன்
நிறையவே எழுதி இருக்கிறது
பதில்களும் இருக்கின்றன
விளக்கங்களைத்தான் காணவில்லை...

விழிக்கு வழி சொல்ல
ஏற்றி வைத்த
விளக்கின் ஒளியில்
நானே
விட்டில் பூச்சியாய்
மாய்ந்து போகிறேன்...

3 comments:

அம்பலத்தார் said...

ஆம், எனை நானே புரிந்துகொள்வதற்குள் எனது வாழ்வின் பாதி கரைந்துவிட்டது

Nathan said...

:) உண்மைதான் அம்பலத்தார் அவர்களே...

தாய்மனம் said...

வாழத்தான் வாழ்க்கை # வாழ்க்கையை புரிந்து கொள்ள தேவை இல்லை # எத்தனை தாய்மார்கள் தங்கள் ஏன் பிறந்தோம் என்ற தேடலில் காலவிரயம் செய்யாமல் # பிறந்த வீட்டுக்கும் வாழும் வீட்டுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் அற்புதமான வார்சுகளை உருவாக்கி கொண்டு இருக்கிறார்கள்

Post a Comment