Tuesday, 4 October 2011

நான் இருக்கிறேன்


அர்த்தம் புரியாத
உன் வார்த்தைகளே
எனக்கு ஆறுதல் மொழியானது...

இரவின் நிசப்தத்தில்
உன் பிஞ்சு விரல்களால்
என் கண்ணம் வருடுகிறாய்
தோள் தட்டுகிறாய்
நான் தூங்கிப் போகின்றேன்...

என் கைகள் மேல்
உன் கைகளை வைத்து
அழுந்தச் சொல்கின்றாய்
“நான் இருக்கிறேன்என்று...

பல நேரங்களில்
நீயல்ல
நான்தான் பிடித்திருக்கின்றேன்
உன் விரல்களை...

உனக்கு நானா
எனக்கு நீயா
கலங்கி நிற்கும் வேளைகளில்
தெளிவாய் சிரிக்கின்றாய்...

என்னை பயமுறுத்திய
அந்த தனிமை
உன்னால் கரைந்து போகின்றது...

அன்பாய் அழகாய்
அமைதி கொள்கின்றேன்
உன்னாலே
உன்னுள்ளே...

1 comment:

அ.முத்து பிரகாஷ் said...

slumdog millionaire ஞாபகத்திற்கு வருகிறது.. அதில் எங்கே கலைத்தன்மை ஒளிந்திருக்கிறதென குறிப்பிட்டு சொல்லிவிட முடியாது..எளிமை ஆனாலும்..

அதைப் போலவே..

Post a Comment