Monday 25 April 2011

சாதாரண மனிதர்களாய்

வேஷம் போடும் பெரியாரிசமும் வேண்டாம் 
காணாமல் போன கம்யுனிசமும் வேண்டாம் 
எங்களை விட்டு விடுங்கள் 
சாதாரண மனிதர்களாய் 
இருந்து விட்டு போகிறோம் 

இருக்க ஒரு இடமும் 
மூன்று வேலை சோறும் 
இல்லாமல் போனாலும் பரவாயில்லை 
மிச்சமிருக்கும் 
உயிரோடு விட்டு விடுங்கள் 
நாங்கள் வாழ்ந்து கொள்கிறோம் 

எங்களின் அவலங்களை 
உரக்கச் சொல்லியே 
மூன்றாம் சந்ததியருக்கும் 
கோடிகளை சேர்த்து விட்ட 
தானை தலைவர்களே 
எங்களை விட்டு விடுங்கள்

எங்கள் மார்பகங்களில் 
இருக்கும் சொச்ச உதிரத்தை கொண்டு
எங்கள் பிள்ளைகளை 
நாங்களே வளர்த்துக் கொள்கிறோம் 
எங்களை விட்டு விடுங்கள்  

உங்களின் அரசியல் வியாபாரத்தில் 
எங்களை 
விபச்சாரம் செய்யச் சொல்ல்லாதீர்கள் 
எங்களை விட்டு விடுங்கள்  

நாங்கள்
மிகவும் சாதாரணமானவர்கள் 
வீரம் கொண்டு 
ஜெயிக்க போவதும் இல்லை
விவேகம் கொண்டு 
வளரப் போவதுமில்லை 
நாங்கள் இப்படியே 
வாழ்ந்து விட்டு போகிறோம் 
எங்களை விட்டு விடுங்கள் 

Sunday 24 April 2011

நீண்டு கொண்டே போகும் பாதை

நீண்டு கொண்டே போகும் பாதை 
அந்த வனாந்தர இருளில் 
நான் மட்டும் தனியாய் 
மனதில் சுமையோடும் 
கண்ணில் கண்ணீரோடும் 
நடக்கிறேன் நடக்கிறேன் 
நடந்து கொண்டே இருக்கிறேன் 
முடிவில்லாத பயணங்கள் 
காரணமில்லாத எண்ணங்கள் 

சுற்றித் துழாவிப் பார்கிறேன் 
பற்றுதலுக்கு 
ஒரு கை கிடைக்குமா என்று 

நான் கை கொடுத்தவர்கள் 
ஏறிப் போக
இந்த இருளில் 
ஆழமாய் மூழ்கிப் போனேனோ 
இங்கே யாரும் இல்லையோ 

இந்த 
கண்ணீர் துளிகள் வேறு 
என்னை மூழ்கடிக்க 
காத்திருக்கின்றன 

தவறுகளும் 
தோல்விகளும் 
பயத்தை சொல்ல 
மூச்சுக் காற்றுக்காக 
நான் ஓடுகிறேன் 
எங்கேனும் ஒரு மூலையில்
இருக்காதா எனக்கான இளைப்பாறல் 

யாரோ உலுக்கி எழுப்ப 
மழை சாரல் தாங்கிய 
தென்றல் காற்று 
இதமாய் முகம் வருடுகிறது 

கண்விழித்தால் 
கண் கொள்ளும் பசுமை எங்கும் 
சித்திரையில் 
மூன்று நாள் மழை 
உற்சாக வெள்ளத்தில் என் பூமி 
பச்சை பசேலென எங்கும் சிலிர்த்துக் கொண்டு 
வாடா மல்லியும் 
கனகாம்பரமும் 
அழகு கூட்ட 
எல்லாம் இனிமையாய் 
அந்த இருளின் 
சுவடே இல்லாமல் 

கண நேரம் கூட 
கண் மூட தோன்றவில்லை 
அத்தனையும் என்னுள் வாங்கி 
இருத்தி கொள்கின்றேன் 

எங்கே என்னை உலுக்கிய கைகள் 
தேடுகின்றேன் 

ஆனந்தமாய் 
இமைகள் மூட
அந்த இருள் 
என்னை விட வேகமாய் 
என் பின்னே 
என்னை மீண்டும் தீண்டுமா 
இல்லை 
அந்த கைகள் 
என்னை அள்ளிக் கொள்ளுமா

Friday 22 April 2011

உணர்ந்தவை

 
ஜன்னல் திறந்தால்
முகத்தில் மோதும் தென்றல்

ஒரே நாளில் 
மொத்தமாய் பூத்துக் குலுங்கும் 
மஞ்சள் பூக்கள் 

எச்சில் ஊரும் 
மழலையின் 
ஈர முத்தம் 

சிறு பிரிவிற்கு பின் 
இறுக்கி அணைக்கும் 
காதலியின் தழுவல்

Wednesday 20 April 2011

Padmasingh Isaac, Aachi Masala - About his mother and wife


Happened to be in a function where CEO of Aachi Masala, Mr. A.Padmasingh Isaac participated. Was impressed to hear his speech. This is a function organized by Self-help group women and so he spoke about the power of women.  Just few points which I felt like sharing here…

1.  The words he told in praise of his mother. It seems he lost his father when he was 4yrs old. He was all praise for his mother the way she conducted the family without his father. She was able to educate all the 6 children it seems. She had some land and she reared cow and goat and these are the only source of income. He paid tributes to his mother for this act some 30 - 40 years back in a village. He was asking if she can do it some 30 - 40 years back why can’t the current educated come up in life.

2. Second one was more impressive as he was paying tribute to his wife. He clearly admitted that if not for his wife Aachi brand wouldn’t be possible. He was working with godrej some 12 years back with a salary of around 20,000. When he discussed with his wife 12 years back about quitting the job and starting Aachi masala, she had supported him. She was with him supporting him even when the going was so tough during the initial 4 yrs of starting Aachi masala. It seems everyone mocked at them. He was very clear when he said that if his wife haven’t supported him at that time and if she hadn’t stayed composed without creating any issues for him domestically he wouldn’t have succeeded. 

Now this question comes into my mind. How many of the business persons (both male or female) have gone through that tough period in business. Mostly all first generation business fraternity would have passed thought that tough phase of losing everything or finding the going tough. How many of them are lucky to have a spouse who stood by them during that tough phase? Wish everyone should know that failures in business are no mistake and with due emotional support anyone can be a success.

Wednesday 13 April 2011

வார்த்தைகள்

வார்த்தைகள் 
அன்பும் அக்கறையும் நிறைந்த வார்த்தைகள்
கிடைக்க அரியவை 

வார்த்தைகள் 
வலி கொடுக்கும் என்றால்
இனிமையும் கொடுக்கும் 

இவை வெறும் 
வார்த்தைகள் அல்ல - 
சக்தி நிறைந்தவை 

தற்கொலையின் கதவுகளை 
தட்டி வந்தவனை கேட்டுப் பார்
அவனுக்கு தெரியும் 
அன்பான வார்த்தைகள் 
என்ன செய்யும் என்று 

நம்பிப் பார்
அந்த வார்த்தைகள்
செயலாகவும்...
நீ விரும்பும் பொருளாகவும் 
உருமாறும் 
அதிசயம் காண்பாய் ..

வா அன்பே 
உனக்கான என் வார்த்தை 
அன்பும் அக்கறையுடனும் 
நிறைய வலிமையையும் கொண்டது 

வா அன்பே 
அன்போடு 
வேண்டியவர்க்கெல்லாம் 
நிறைய வார்த்தைகள் 
சொல்லி வைப்போம்...

Monday 11 April 2011

காயங்களை தடவிக் கொடுப்பது

இந்த மனித மனங்களை 
தொட்டுப் பார்ப்பது
இதமாய் இருக்கிறது 

அவர்களின் காயங்களை 
தடவிக் கொடுப்பது 
எனக்கு 
சுகமாய் இருக்கிறது 

இதை நான் 
இழப்பு என்பதா 
புரியவில்லை 

நான் 
இப்படியே வாழ்ந்துவிட்டு போகிறேன் 
எல்லோருக்குமாய்....
அடுத்தவர் பார்வையில் ஏமாளியாய் 
எல்லோருக்கும் 
ஏதோ ஒரு தருணத்தில் 
சுகமான தென்றலாய் 
இருந்துவிட்டு போகிறேன் 
எல்லாமுமாய் இருப்பதை விட 


Sunday 3 April 2011

என் நம்பிக்கை மரணிக்காது

அத்தனையும் விட்டு போனாலும் 
நீ இருகின்றாய் 
என் தன்னம்பிக்கை 
நீ என்னோடே இருக்கின்றாய் 
பொருள் விட்டு போகலாம் 
மண் விட்டு போகலாம் 
சொந்தம் விட்டு போகலாம்
காதல் விட்டு போகலாம்
உறவு விட்டு போகலாம்
உயிர் கூட 
விட்டு போகப் பார்க்கலாம் 
நம்பிக்கை மட்டும் விட்டு போகாதே...
நான் ஜனித்த காரணம் ஒன்று உண்டு
அது முடியாமல் 
என் இலக்கு எட்டாமல் 
என் நம்பிக்கை மரணிக்காது....
நம்பிக்கை இருக்கும் வரை 
வாழ்க்கை இறக்காது.....

Saturday 2 April 2011

என்னை நானே உயிர்ப்பித்துக் கொள்கின்றேன்

நான் தனியாய் 
இப்படித்தான் இருந்திருக்கிறேன்
கூட்டத்தில் கை வீசி நடந்தாலும்
தனியாய் 
சுகமாய் இருந்திருக்கிறேன் 
முன்னொரு சமயம் 
நிறைய எழுதி இருக்கிறேன் 
படிப்பதற்கு என் உலகில் 
யாரும் இல்லை 
கற்பனையும் கலையும்
உறங்கச் சென்றன 
இதோ மீண்டும் நான்
என்னை நானே உயிர்ப்பித்துக் கொள்கின்றேன்....
இன்றும் தனியாகவே 
என் கை பிடித்து மகிழ்ந்தவர் 
வேறொருவர் கை பிடித்தவுடன்....
நான் தனியாகவே இருந்திருக்கிறேன்....
ஆனால் மகிழ்ச்சியாக...

என் வாழ்வின் மகிழ்வுகள் 
என்னை சுற்றி நடக்கும் நிகழ்வுகள் 
இங்கே பதிகின்றேன்...