கனவுகள் கற்பனையா
நினைவில்
நின்றுவிட்ட
நிஜங்களின்
தொடர்ச்சியா...
கனவுகள் பல
கருப்பாய் இருக்கிறது
சில
வெள்ளையாக தெரிகிறது
பல கருப்பு
வெள்ளையாக விரிகிறது
வண்ணக்
கலவை கொண்டும்
பல தீட்டப்படுகின்றன...
அவற்றில்
பல அங்கேயே நின்று விடுகிறது
சில
விழித்த பின்னும் தொடர்கிறது
சிலையாக
நிற்கும் கனவுகள் உண்டு
திரைகாட்சியாகவும்
சில ஓடுகின்றன...
முகம்கூட
அறிந்திராத பெண்ணுடன்
புணர்ந்து
எழுந்து
அவள் யாரென
யோசித்து யோசித்து
மீண்டும்
உறங்கிப் போகிறேன் கனவுக்குள்...
அடிக்கடி என்னை
நிர்வாணாமாக்கி
ஓட
விடுவதில்
என்
கனவுக்கு அத்தனை ஆசை
என்னை
விரட்டி வருபவர்களில்
நானே
இருந்திருக்கிறேன்...
பயந்து விட்டு
விலக முடியாமல்
தூக்கம்
கலைத்த
கனவுகள் பல
எத்தனை
முறை முயன்றிருக்கிறேன்
அங்கிருந்து
நிஜத்திற்கு ஓடிவந்துவிட...
சுகமாகவும்
இதமாகவும்
இன்னும் வேண்டும்
என கேட்டு
கண்கள்
திறக்க விடாமல்
திறந்தால்
தொலைந்துவிடுமோயென
கற்பனையாய்
தொடர்ந்த கனவுகள் பல
எத்தனை
முறை விரும்பியிருப்பேன்
அங்கேயே
இருந்துவிட....
1 comment:
எனக்கும் அந்தமாதிரி ஒரு கனவு. மேற்சட்டை அணியாமல் வெளியே திரிவது போல்.
ஆக மொத்தம் எல்லா கனவும் ஒரே ஸ்டேசன்ல இருந்துதான் டெலிகாஸ்ட் ஆகுது போல!
அவ்வ்வ்
Post a Comment