ஒரு ருத்ரதாண்டவம்
சுற்றி நடக்கும் ஊழலும்
மாறிப் போன மனிதமும்
பணம் தந்த மமதையில் வந்த ஆணவம்
அத்த்னையும் தவறாய் இருக்கிறது
தலைவன் எல்லோரும் தவறாக சுயநலமாய்
செய்திடவா சூரசம்காரம்
பத்து தலை என்று இருமார்ந்து இருந்தேன்
இங்கே என் வாளுக்கு
அத்தனை தலையும் வேண்டும் போல
கொஞ்சம் அசதியாய்தான் இருக்கிறது
இது சாத்தியமா
இந்த சமுதாய கோபம் தேவையானதா
4 comments:
/இங்கே என் வாளுக்கு
அத்தனை தலையும் வேண்டும்
போல
கொஞ்சம் அசதியாய்தான்
இருக்கிறது/
இந்த வரிகள் அருமை. ரொம்ப நல்லாருக்கு. தொடர வேண்டுகிறேன்
நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.
@Sowmya,
நன்றி...
@Rathnavel Sir,
உங்களின் ஊக்கத்திற்கு மிக்க நன்றி...
Post a Comment