Monday, 25 April 2011

சாதாரண மனிதர்களாய்

வேஷம் போடும் பெரியாரிசமும் வேண்டாம் 
காணாமல் போன கம்யுனிசமும் வேண்டாம் 
எங்களை விட்டு விடுங்கள் 
சாதாரண மனிதர்களாய் 
இருந்து விட்டு போகிறோம் 

இருக்க ஒரு இடமும் 
மூன்று வேலை சோறும் 
இல்லாமல் போனாலும் பரவாயில்லை 
மிச்சமிருக்கும் 
உயிரோடு விட்டு விடுங்கள் 
நாங்கள் வாழ்ந்து கொள்கிறோம் 

எங்களின் அவலங்களை 
உரக்கச் சொல்லியே 
மூன்றாம் சந்ததியருக்கும் 
கோடிகளை சேர்த்து விட்ட 
தானை தலைவர்களே 
எங்களை விட்டு விடுங்கள்

எங்கள் மார்பகங்களில் 
இருக்கும் சொச்ச உதிரத்தை கொண்டு
எங்கள் பிள்ளைகளை 
நாங்களே வளர்த்துக் கொள்கிறோம் 
எங்களை விட்டு விடுங்கள்  

உங்களின் அரசியல் வியாபாரத்தில் 
எங்களை 
விபச்சாரம் செய்யச் சொல்ல்லாதீர்கள் 
எங்களை விட்டு விடுங்கள்  

நாங்கள்
மிகவும் சாதாரணமானவர்கள் 
வீரம் கொண்டு 
ஜெயிக்க போவதும் இல்லை
விவேகம் கொண்டு 
வளரப் போவதுமில்லை 
நாங்கள் இப்படியே 
வாழ்ந்து விட்டு போகிறோம் 
எங்களை விட்டு விடுங்கள் 

2 comments:

Rathnavel Natarajan said...

நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.

அ.முத்து பிரகாஷ் said...

அக்கினிக் குஞ்சு.

Post a Comment