Thursday, 19 May 2011

மாடர்ன் காதல்


இது ஒரு
மாடர்ன் காதல்
வார இறுதியில்
இருளின் வெளிச்சத்தில்
இடை தழுவி
ஆட்டம் போட்டு
மோகம் கொள்ளும்..

மற்ற நாட்களில்
கைப்பேசி
தூது சொல்லும்
குருஞ்செய்தி தென்றல் வீசும்
‘சொல்லுடா செல்லம்
‘ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
நீளும் மௌனம்
இவைகள் இரவைக் கரைக்கும்...

அன்றைய வேலை தந்த
வேர்வையின் எரிச்சலூடே
கனவுகளில் காதல் கொள்ள
தூங்கிப் போவோம்....

ஜாதியும் மதமும்
இல்லாமல் போன
எங்களின் நகரத்து காதல்களில்
பணமும்
நிலையான வாழ்வின் உறுதிப்பாடுமே
காதலை கல்யாணம்வரை
கட்த்திச் செல்லும் பாலமாகின்றன...

எங்களின் காதலை
பெற்றோர் பிரிக்க முடியாது
நாம் நானாகி
நாங்களே பிரித்துக் கொண்டால்தான்...

இயந்திரமாய்
இயங்கிக் கொண்டிருக்கும்
எங்களின் காதலிலும்
அன்பு இருக்கிறது
ஏக்கம் இருக்கிறது
மோகம் இருக்கிறது
நிறைய
வலியும் இருக்கிறது....
.

1 comment:

Rathnavel Natarajan said...

நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.

Post a Comment