அதோ இறந்து கிடக்கும் என்னை
எட்டி நின்று பார்க்கின்றேன்
ஏதும் புரியாமல்
என் புன்னகை மட்டும் மாறாமல்
எல்லோரும்
என்னை சுற்றி
ஒப்பாரிகள்
அதோ
என்னை பெற்றவர்கள்
அழுகையூடே
தங்களின் பாசத்தை புலம்பிக் கொண்டு
மாறாத என் புன்னகை
மெல்லக் கரைகிறது
திக்குத் தெரியாமல்
மூலையில் என்னவள்
என்ன செய்வாள் இனி
நான் தூங்குவதாய்
சிணுங்களோடு சிரித்துகொண்டே
என்னை எழுப்புகிறாள்
என் தாயான
என் மகள்
அத்தனை புன்னகையும்
காணாமல் போனது
அதோ இறந்து கிடக்கும்
என்னை பார்த்து
நான் அழுகிறேன்
முன்னர் பல முறை
நான் இறந்திருக்கிறேன்
என் சுயம் இழந்த
ஒவ்வொரு முறையும்
நான் இறந்துபோயிருக்கிறேன்
அத்தனை முறையும்
என்னோடு நான் இருந்தேன்
மீண்டும் புதிதாய் பிறந்தேன்...
இது நான் தனியாக
என்னை அங்கே விட்டுவிட்டு
இது நிரந்தரம்
நிஜம் சுடுகிறது...
முடிந்தே விட்டது
அத்தனை பலத்தையும்
ஒன்றாய் சேர்த்து
விழித்து எழுகின்றேன்
தட்டி எழுப்புகிறாள்
என் தாயானவள்
அத்தனை கனவும் கலைந்து
நிஜம் எதிரில் நிற்கிறது
நான் சிரிக்கின்றேன்
வெல்வேன் இனி
இறப்பின் வலி அறிந்தவனாய்...
6 comments:
நல்லா இருக்கு செந்தில். இருந்தாலும் எழுத்துப்பிழைகளையும் ஒற்றுக்களையும் களைந்தால் மெருகேறும்.
பார்ர்கின்றேன்
சினுங்களோடு
அறிந்தனாய்
இதெல்லாம் இருக்கவே படாது. :)
வாழ்த்துகள்!
@செந்தில்,
வாழ்த்துக்கு மகிழ்ச்சி...
அதைவிட அதிகம் மகிழ்ச்சி குறைகளை சுட்டி காட்டியதற்கு... திருத்தங்களை செய்திருக்கின்றேன்...
ஒற்றுக்களை நிவர்த்தி செய்யும் அளவு என் மொழி அறிவு இல்லை.. முடிந்த அளவு முயற்சி செய்கிறேன் நண்பரே...
அருமை சகோதரர்!!!
மரணம் பற்றிய அச்சம்,இறையச்சம் இருந்தால் ஒருவன் வாழ்வில் கண்டிப்பாக முன்னேற துடிப்பான்
வாழ்த்துக்கள்
உங்களின் இந்த இடுகையை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்... நேரம் கிடைக்கும் போது பார்வையிடவும்
http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_4769.html
வாழ்த்துக்கள்
@ஆமினா,
வாழ்த்துக்கும் அறிமுகப்படுத்தலுக்கும் நன்றி - மகிழ்ச்சி...
தருமர் நவீன கவிதை எழுதினால் எப்படியிருக்குமோ..
அப்படி..
இருப்பினும்...
இன்னும் கொஞ்ச நாள் அடை காத்திருக்கலாம்.
Post a Comment